ஞானத்திரள் உங்களை அன்புடன் வரவேற்கிறது!!!

ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல்
ஊனத்திரளை நீக்கும் அதுவும் உண்மைப் பொருள் போலும்
ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்
ஆனைத்திரள் வந்தணையும் சாரல் அண்ணாமலையாரே

திருஞானசம்பந்தர்

ஞானத்திரள்

சமயங்களுக்கெல்லாம் மேலாக விளங்குகின்ற சைவ சமயத்தின் கொள்கைகள் நம்முடைய அன்றாட வாழ்வில் பொருந்துகின்ற சிறப்பை யாவரும் அறியச் செய்வது ஞானத்திரளின் தலையாய நோக்கங்களில் முதலாவதாகும் சிவமே முழு முதற்பொருள் என்று நிறுவுகின்ற பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திர நூல்களும் எங்களுக்குப் பிரமாணமாகும்.

ஞானத்திரள் சைவ சமய மாத இதழ் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக 26-01-2011 அன்று சைதை, ஶ்ரீ நடராசர் தமிழ் வேத பாராயண பக்த ஜன சபையில் நடந்தேறியது. விழாவிற்கு வந்திருந்த அன்பர்களைப் பதிப்பாசிரியர் இரா.அருணாசலம் அவர்கள் வரவேற்க டாக்டர் விச்வேச்வரன் அவர்கள் தலைமை தாங்கி முதல் இதழை வெளியிட்டார்கள். முதல் இதழைப் பாடி சுப்ரமணியம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். புதுச்சேரி முனைவர் சிவமாதவன், பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம் அவர்கள் வாழ்த்துரை வழங்க ஆசிரியர் சிறப்புரை வழங்கினார்.

 

ஞானத்திரள் பதிப்புகள்

ஞானத்திரள் குறுந்தகடுகள்